மேலும்

நாள்: 13th August 2019

மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றத்தை நாடினார் சிறிலங்கா அதிபர்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம்

மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.

சோபா குறித்து மாரப்பனவுடன் பேசினாரா அலிஸ் வெல்ஸ்?

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கோத்தா அதிபரானால் நாடு நாசமாகி விடும் – சந்திரிகா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நொவம்பரில் நாட்டின் அதிபராவேன் – பதுளையில் சஜித் சூளுரை

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, பதுளையில் நேற்று பாரிய கூட்டம் நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும், வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.