மேலும்

நாள்: 16th August 2019

ஒன்றிணைகின்றன சிறிலங்காவின் இரண்டு பௌத்த பீடங்கள்

சிறிலங்காவின் முக்கியமான இரண்டு பௌத்த பீடங்களான, ராமன்ய நிக்காயவும், அமரபுர நிக்காயவும், இன்று இணைந்து கொள்ளவுள்ளன.

குடியுரிமை துறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயார் – நாமல்

தேவைப்பட்டால், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு விளக்கம் கொடுக்க 5 நீதிபதிகளைக் கொண்ட குழாம்

மாகாணசபைத் தேர்தல்களை, முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடத்த முடியுமா என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ள விளக்கத்துக்கு பதிலளிப்பதற்காக, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி

வரும் அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1

காஷ்மீர்  தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக  இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது.