இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்
கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். இராணுவத் தளபதி ஒருவரின் நியமன விடயத்தில், இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எதிர்கொண்ட மிகநெருக்கடியான தருணம் இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.