மேலும்

நாள்: 6th August 2019

கோத்தாவை சந்திக்கும் ஐதேக அமைச்சர்கள் – அம்பலமாகும் இரகசியங்கள்

கோத்தாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோத்தாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்ததாகவும், அது பகல் வெளிச்சத்தில் வெளிப்படையாக நடந்த சந்திப்பே அது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய- சிறிலங்கா தரைப்படைத் தளபதிகள் பேச்சு

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மைத்திரியுடன் மகிந்த நேற்றிரவு சந்திப்பு

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்வது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், நேற்றிரவு முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சஜித் அணியினரின் புது அழுத்தம் – ஐதேகவுக்கு மற்றொரு நெருக்கடி

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக அமைக்கவுள்ள கூட்டணியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்க வேண்டும் என, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அணியினர்  தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசநாயக்க மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.