மேலும்

நாள்: 20th August 2019

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வெளிநாடுகள் நுழைவிசைவு வழங்கக்கூடாது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்,  இந்த நியமனத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் தனது மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

7000 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பலி

சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா பொதுச்செயலர் கவலை

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரம் – அமெரிக்காவின் நிலைப்பாடே அது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கிலானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தளபதி நியமன சர்ச்சை – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாடு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுடன் கனடிய தூதுவர், அகாஷி தனித்தனியே சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று சிறிலங்காவின்  எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

கோத்தாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.