மேலும்

நாள்: 30th August 2019

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள் புறக்கணிப்பு

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடக்கும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்துள்ளனர்.

பலாலியில் இருந்து விமான சேவை – பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டம்

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆறு பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத் தளபதியின் பரந்துரைகளுக்கமை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வை வழங்கியுள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பு – இராஜதந்திரிகளிடம் ரணில் உறுதி

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கோத்தாவுடன் தனியான உடன்பாடு – சுதந்திரக் கட்சி முயற்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுடன் தனியாக புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

சட்ட செயலர் பொய் சொல்கிறார் – அவரை நீக்க வேண்டும்

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரை வேட்பாளரை அறிவிக்க முடியாது என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டிருக்கவில்லை என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.