மேலும்

மாதம்: November 2017

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – தேர்தல்கள் ஆணைய தலைவர் கருத்து வெளியிட மறுப்பு

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மறுப்புத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சதி – நாடாளுமன்றில் கட்சிகள் கருத்து

உள்ளூராட்சித் தேர்தல்கள் மீண்டும் தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கவலை வெளியிட்டனர்.

புதுடெல்லி சென்றார் ரணில் – இன்று மோடியைச் சந்திக்கிறார்

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மன்னார் ஆயராக லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகையை, கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

பிக்குகள், இராணுவ குடும்பத்தினரை வேட்பாளர்களாக நிறுத்துகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் போட்டியிடவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவில் பௌத்த பிக்குகளையும், படையினரின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு 6 மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறுமாத சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

காணாமல்போனோர் பணியகம் அடுத்த ஆண்டே முழுஅளவில் செயற்படும் – மனோ தித்தவெல

காணாமல்போனோருக்கான பணியகம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியிலேயே முழு அளவில் செயற்படத் தொடங்கும் என்று நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

தென்கொரியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் தென்கொரியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த ஆப்பு?

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.