மேலும்

நாள்: 11th November 2017

வடக்கில் தமிழர்கள் மீதான இராணுவ மீறல்களை உறுதிப்படுத்துகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் சில தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை டிசெம்பர் 8ஆம் நாள் பொறுப்பேற்கிறது சீன நிறுவனம்

சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையும் இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை வரும் டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம் இயக்கவுள்ளது.

உள்ளூராட்சி சபைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய வர்த்தமானி வெளியானது

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு   தாக்கலுக்குரிய நாட்கள்   விரைவில்  அறிவிக்கப்படவுள்ளன.  அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கு  மும்முரமாக தயாராகி வருகின்றன.  இம்முறை  தேர்தலானது புதிய  முறையில்-  வட்டார மற்றும் விகிதாசார முறை என  கலப்பு முறையில்   நடைபெறவுள்ளமையே  சிறப்பு அம்சமாகும்.

புதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, பியசேன கமகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று  சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு வந்தது சீன பயிற்சிக் கப்பல்

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83)  நான்கு நாட்கள் பணமாக நேற்றுக்காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.