மேலும்

நாள்: 8th November 2017

பிலியந்தல பேருந்து குண்டுவெடிப்பு – புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு முதலாவது ரோந்துக் கப்பலை வழங்கியது ஜப்பான்

சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதாக ஜப்பான் வாக்குறுதி

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.

சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரஷ்ய போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரொகான் பலேவத்த எச்சரிக்கை

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, சிறிலங்கா இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றிரவு வருகிறது எரிபொருள் கப்பல்- நாளை நண்பகல் தட்டுப்பாடு நீங்கும் என்கிறார் அமைச்சர்

இன்று இரவு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நுழைய கீதா குமாரசிங்கவுக்கு தடை

நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தடை விதித்துள்ளார்.