அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படை முகாமில் மீட்பு
அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.