மேலும்

நாள்: 27th November 2017

தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் (படங்கள்)

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.

நினைவேந்தலுக்குத் தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் (படங்கள்)

மாவீரர் நாளான இன்று தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களும், மாவீரர் நினைவிடங்களும், புத்துயிர் பெற்று எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின்  மூலம் உணர்ந்தவர்களாகவே  மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்துவதில் முந்தியது சிறிலங்கா பொதுஜன முன்னணி

சிறிலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

93 உள்ளூராட்சி சபைகளுக்கு டிசெம்பர் 11 முதல் 14 வரை முதல் வேட்புமனுத்தாக்கல்

சிறிலங்காவில் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

மாவீரர்களை நினைவுகூர சிறிலங்கா அனுமதிக்க வேண்டும்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

வடக்கு, கிழக்கில் போரில் இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்புமனுக்கள் கோரப்படும்

சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தென்கொரியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசுமுறைப் பயணமாக இன்று தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச்  செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.