மேலும்

நாள்: 16th November 2017

வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது – அரசுக்கு மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. 

வடக்கு ,கிழக்கில் 50,000 வீடுகளைக் கட்டும் திட்டம்- விதிமுறைகள் தளர்வு

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 50,000 செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை சிறிலங்கா அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. அத்துடன் இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக் கோருகிறது அமெரிக்கா

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

கடற்படை மருத்துவமனையில் சுகபோகம் – கொமடோர் தசநாயக்கவை வெலிக்கடைக்கு மாற்ற உத்தரவு

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை, கடற்படை மருத்துவமனையில் இருந்து, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறு, கொழும்பு கோட்டே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்றி விட முடியாது – ஜெனிவா மாநாட்டில் சிறிலங்கா

மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது என்றும், உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை என்றும் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.