ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு
சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.