மேலும்

நாள்: 24th November 2017

கோத்தாவை கைது செய்ய சிறிலங்கா அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சிறிலங்கா அதிபர் இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகிவிடுவேன் – ஐதேகவுக்கு மைத்திரி எச்சரிக்கை

ஊழல், மோசடிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் போது, தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், எல்லாப் பதவிகளையும் கைவிட்டு விட்டு மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

கோத்தாவுக்காக பிக்குகள் போராட்டத்தில் குதிப்பர் – எச்சரிக்கிறார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக கணிசமானளவு பௌத்த பிக்குகள் வீதியில் இறங்குவார்கள் என்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

சுஸ்மாவைச் சந்தித்து விட்டு கொழும்பு திரும்பினார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டுமுயற்சித் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தினார் மோடி

சிறிலங்காவில் இந்தியாவின் கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

ராகுல், மன்மோகனுடன் இணைந்து ரணிலைச் சந்தித்தார் சோனியா

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, காங்கிஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் – ராம்நாத் கோவிந்த்

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்துள்ளார்.

தடுத்து நிறுத்தப்பட்ட கோத்தாவின் கைது?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.