மேலும்

நாள்: 3rd November 2017

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்கவுள்ளது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா உதவி வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், இதற்கான உறுதிமொழியை அளித்துள்ளார்.

அரியாலை படுகொலை – இரண்டு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கைது

அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு ஏமாற்றம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

அடுத்து கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா

சிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிராப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.

கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்

‘அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.