மேலும்

நாள்: 21st November 2017

பதவிநீக்கத்துக்கு எதிரான டெனீஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, தொடர்ந்து விசாரிக்குமாறு சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈபிஆர்எல்எவ்வுக்குள் குழப்பம் – தமிழ் அரசுக் கட்சிக்கு தாவினார் ரவிகரன்

வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான துரைராசா ரவிகரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று பெங்களூர் செல்லும் சிறிலங்கா பிரதமர், உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் கைதிகளில் 10 பேர் மாத்திரம் மோசமான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் – சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எட்கா உடன்பாடு குறித்து இந்தியாவுடன் அடுத்தமாதம் பேச்சு – மலிக் சமரவிக்கிரம

இந்தியாவுடனான எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்த அடுத்தகட்டப் பேச்சுக்கள், அடுத்தமாதம் நடைபெறும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.