மேலும்

நாள்: 18th November 2017

ஜின்தோட்டையில் இன்று மாலை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜிந்தோட்டை பிரதேசத்தில்  இன்று மாலை மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

யாரும் போகலாம், யாரும் வரலாம் திறந்தே கிடக்கிறது கதவு – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எவரும் வெளியே செல்வதற்கு தடையில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – சரத் பொன்சேகா

வடக்கில் உள்ள முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்றும், சிறிலங்கா இராணுவத்தினர் அங்கே தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என்றும் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்குள் என்கிறது அரசாங்கம்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டவில், முஸ்லிம்களுக்கு எதிராக நேற்றிரவு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

திடீரென அமெரிக்கா சென்ற பிரசாத் காரியவசம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான  முதன்மை பிரதி உதவிச் செயலர்,  அலிஸ் வெல்ஸ் அம்மையாரை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெனிவாவில் பூகோள கால மீளாய்வின் போது 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் போது, உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 53 யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் பாம்பு – அமைச்சர்களின் ஆலோசனை அறைக்குள் பதுங்கியிருந்தது

சிறிலங்கா நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க  குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜின்தோட்டையில் முஸ்லிம்களின், வீடுகள், கடைகள் எரிப்பு- இனமுறுகலை அடுத்து ஊடரங்கு அமுல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து  அங்கு நேற்றிரவு முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.