மேலும்

மாதம்: October 2017

நுவரெலியவில் நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதில்லை- இந்திய மாநாட்டில் மகிந்த

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு

யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவுக்குப் பயணம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவே சிறிலங்கா வரவுள்ளது.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஏற்கத் தயாராகிறது கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படாது – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கோ வேறெந்த நாட்டுக்கோ தாரைவார்க்க முற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலை உணவுக்காக நாடாளுமன்றம் சென்ற விமல் வீரவன்ச அணி

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுன்றத்தைப் புறக்கணித்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதியபோசனத்துக்காக நாடாளுமன்ற உணவகத்துச் சென்றிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

முதலீட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர்

முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.