மேலும்

மன்னார் ஆயராக லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்

Bishop Fidelis Lionel Emmanuel Fernandoமன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகையை, கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

கொழும்பு மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றும், பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகையை, மன்னார் மறைமாவட்ட ஆயராக நியமிக்கும் அறிவிப்பை வத்திக்கான் நேற்று வெளியிட்டது.

மன்னார் ஆயராக பணியாற்றிய இராயப்பு யொசெப் ஆண்டகை  உடல்நலக் குறைவினால் விருப்ப ஓய்வுபெற்றதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை தற்காலிக ஆயராக வத்திக்கான் நியமித்திருந்தது.

இந்த நிலையில், புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் தமது பணிகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை 1948ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். எனினும் அவர் மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளிலேயே பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *