மேலும்

நாள்: 12th November 2017

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில்  கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்

சிறிலங்காவில் புதிய முறைப்படி  உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சித்திரவதை குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறிலங்கா

அண்மைக்காலங்களில் சிறிலங்காவில் 50இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகப் போகும் 2000 பெண் பிரதிநிதிகள்

புதிதாக தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

திடீரென சிங்கப்பூர் பறந்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர், சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் நொவம்பர் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.