முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.