மேலும்

நாள்: 2nd November 2017

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண மற்றும் பயிற்சிப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.

கீதா குமாரசிங்கவின் தகுதி நீக்கத்தை உறுதிப்படுத்தியது சிறிலங்கா உச்சநீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரச்சினையை தீர்க்காவிடின் அனைத்துலக அழுத்தம் தீவிரமடையும் – சம்பந்தன் எச்சரிக்கை

பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படாவிடின், சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தம் மேலும் மோசமடையும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் முக்கியமான பங்காளி சிறிலங்கா – சீன உதவிப் பிரதமர்

சிறிலங்காவை, சீனாவின் முக்கியமான ஒரு பங்காளி என்று சீனாவின்  உதவிப் பிரதமர் வாங் யாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று பீஜிங்கில் சீன உதவிப் பிரதமர் வாய் யாங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அட்மிரல் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவின் கடற்படைத் தளபதி பதவியில் இருந்து கடந்த வாரம் ஓய்வுபெற்ற  அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்றும் தொடரும்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்றும் நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரி கொலை- புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

தெகிவளை சிறிலங்கா காவல் நிலைய புலனாய்வு அதிகாரி சுனில் தாப்ரு படுகொலை வழக்கில், விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான, செல்லத்துரை கிருபாகரனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனவரி கடைசி வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.