மேலும்

நாள்: 19th November 2017

சிறிலங்கா கொடியை ஏற்ற மறுத்த கல்வி அமைச்சர் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கிறார் ஆளுனர்

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் 2 நாட்களில் 41 வாள்வெட்டு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் கணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பு முறையே காரணம் – பிரதீப் கொடிப்பிலி

அண்மைய மழையின் போது, யாழ். குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு, கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்தமை காரணம் அல்ல என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்

அண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை.

இரண்டாவது கட்ட மழைவீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பம்

வடகீழ் பருவக் காலத்தின் இரண்டாவது கட்ட மழை வீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறுவது கோழைத்தனம் – சரத் பொன்சேகா

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, சிறிலங்கா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும், புதன்கிழமை இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வெளியில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.