மேலும்

நாள்: 4th November 2017

அரியாலை படுகொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை

அரியாலை கிழக்கு- மணியம்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு- ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையில் காத்திருப்பு

சிறிலங்காவில் மட்டுப்படுத்தப்பட்டளவு எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்பட்டு வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நேற்று முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை மறுநாள் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மெடிற்றரேனியன் கடலில் இலங்கையர்கள் உள்ளிட்ட 764 அகதிகள், 23 சடலங்களுடன் படகு மீட்பு

மெடிற்றரேனியன் கடலில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலிய கடலோரக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.