மேலும்

நாள்: 15th November 2017

யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு 6 இலட்ச ரூபா இழப்பீடு – சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவு

புத்தரின் படத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு, 6இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும்,  தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவருமான, சந்திரிகா குமாரதுங்க, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆழிப்பேரலை வதந்தியால் வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் பதற்றம்

ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படப் போவதாகப் பரவிய வதந்தியை அடுத்து, வடக்கு- கிழக்கு கரையோரப் பகுதிகளில் இன்று மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

மூத்த ஊடகப் பேராசான் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார்

எஸ்எம்ஜி, கோபு ஐயா என்று ஊடகத்துறையினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், (வயது-87) இன்று காலை மட்டக்களப்பில் காலமானார்.

விஜேவீர கொலைக்கு பொறுப்பேற்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை – லால்காந்த

றோகண விஜேவீரவை தான் கொலை செய்யவில்லை என்று மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தன்னிடம் கூறியதாக, ஜேவிபியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளே நெருக்கடிக்குக் காரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளே காரணம் என்று, மூன்று அமைச்சர்களைக் கொண்ட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அனைத்துலக புலனாய்வு அதிகாரிகளின் கருத்தரங்கு

அனைத்துலக காவல்துறையின்( இன்ரபோல்)  புலனாய்வு அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும் என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.