மேலும்

மாதம்: November 2017

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்

அமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான பொருளாதாரத் தலையீட்டைக் காண்பிப்பதானது சீனாவை மேலும் உறுதியான பூகோளப் பங்களிப்பை நோக்கி இழுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டு அரசில் இருந்து விலக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு

கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளதால், கூட்டு எதிரணியுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் முடங்கியுள்ளன.

அரசிதழுக்கு எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ள இணக்கம் – உள்ளூராட்சித் தேர்தலுக்கு பச்சைக்கொடி

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் வசாவிளானில் 29 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், வசாவிளான் பகுதியில் 27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினர் வசம் இருந்து வந்த 29 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறது ஐ.நா பணிக்குழு

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் தொடர்பான, ஐ.நா பணிக்குழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவின் மூன்று உறுப்பினர்கள், சிறிலங்காவில் எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கோத்தாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – சுதந்திரக் கட்சிக்கு மகிந்த அணி நிபந்தனை

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதானால், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி.