மேலும்

மாதம்: November 2017

ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை – கூட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி?

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

புலிகளை நினைவுகூர்ந்தவர்கள் குற்றவாளிகளாம் – மிரட்டுகிறார் ருவான்

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிபரை எதிர்பாராமல் சந்தித்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னும் நேற்று எதிர்பாராத வகையில் திடீரெனச் சந்தித்தனர்.

சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

மகிந்த – மைத்திரி அணிகளை இணைக்கும் பேச்சு தோல்வி

உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு – மைத்திரியை விமர்சிப்பதற்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – அஞ்சல் மூலம் வாக்களிக்க டிசெம்பர் 15இற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள்  டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தென்கொரியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை தென்கொரியாவைச் சென்றடைந்தார்.