மேலும்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

Mark Fieldஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்த விவகாரத்தை தாம் எழுப்பியதாக, ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

“ஒக்ரோபர் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு, மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியமானது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் எடுத்துக் கூறியிருந்தேன்.

இராணுவத்தினர் வசமுள்ள அனைத்து தனியார் காணிகளையும் விடுவித்தல், காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக அந்த வாக்குறுதிகள் அமைந்துள்ளன.

34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *