மேலும்

செய்தியாளர்: Vanni

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகளை அமைப்பதில் அனுர அரசு விடாப்பிடி

மன்னாரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதில், சிறிலங்கா அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதாக  மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னாரை அதிர வைத்த கண்டனப் போராட்டம்- ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் சிறிலங்கா காவல்துறை அட்டூழியம்- பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்

மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர்  கொடூரமான  முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியாவில்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில்  நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்- 2 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக- கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் இருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்தையன்கட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு  சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி மன்னாரில் அமைதிப் பேரணி

வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி, மன்னாரில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெரும் பதற்றம் – சிறிலங்கா காவல்துறையால் ஒருவர் பலி

வவுனியா-  கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

திரிவைச்சகுளத்தில் சிங்கள குடியேற்றத்துக்காக 300 ஏக்கர் காடுகள் அழிப்பு

வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.