மேலும்

மாதம்: July 2017

காலி துறைமுகத்தில் மிதக்கும் மின்உற்பத்தி நிலையம்

காலி துறைமுகத்தில் 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மிதக்கும் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டம்- சிறிலங்கா அதிபருக்கு விளக்கினார் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முதல் முறையாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மீளக்குடியேறும் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறி 27 ஆண்டுகள் கடந்துள்ளன.

‘மாற்றுத் தலைமைக்கு இடமில்லை; ஒற்றுமையே பலம்’ – விக்னேஸ்வரன் அறிவிப்பு

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் அமெரிக்காவில் தப்பியோட்டம்

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் ஜெயந்த ரத்நாயக்க தலைமறைவாகியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அன்சாக் வகையைச்  சேர்ந்த, எச்எம்ஏஎஸ் அருந்த என்ற போர்க் கப்பலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது.

இரண்டு காவல்துறையினருக்கும் விளக்கமறியல் – இன்று இறுதிச்சடங்கு நடப்பதால் பாதுகாப்பு அதிகரிப்பு

மணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சரின் வாகனத்தில் கைத்துப்பாக்கி, கைக்குண்டு – விசாரணைகள் ஆரம்பம்

பிரதி அமைச்சரினால் மீளக் கையளிக்கப்பட்ட சொகுசு வாகனத்தினுள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது குறித்து, இரண்டு வெவ்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்

முன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும்,  கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.