மேலும்

கொழும்பு துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல்

HMAS Aruntaஅவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அன்சாக் வகையைச்  சேர்ந்த, எச்எம்ஏஎஸ் அருந்த என்ற போர்க் கப்பலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது.

118 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில், 24 அதிகாரிகள் உள்ளிட்ட 190 அவுஸ்ரேலியக் கடற்படையினர், சிறிலங்காவுக்கு வந்துள்ளனர்.

வரும் 14ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, அவுஸ்ரேலிய கப்பல், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது.

HMAS Arunta

சென்னை அருகே, இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகள் இணைந்து மலபார் பயிற்சி என்ற பெயரில் பாரிய கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன.

இந்த ஒத்திகையில் பங்கேற்க அவுஸ்ரேலியாவும் விருப்பம் வெளியிட்டிருந்தது. எனினும் இந்தியா அந்த கோரிக்கையை நிராகரித்து விட்ட நிலையில், அவுஸ்ரேலிய போர்க்கப்பல், இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் பகுதியை அண்டிய- கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *