மேலும்

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

Ben Emmersonமனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகள், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வுக்குப் பொறுப்பான  அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

தீவிரவாத குற்றங்கள் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அல்லது தண்டனை விதிக்கப்பட்டுவர்களைச் சந்திக்க, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும பென் எமர்சன் செல்லவுள்ளார்.

அனுராதபுர, வவுனியா உள்ளிட்ட இடங்களுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன்,  தனது பயணத்தின் முடிவில், தனது அவதானிப்புகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக, வரும் ஜூலை 14ஆம் நாள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துவார்.

அதேவேளை இவர் தனது கண்டறிவுகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான விரிவான அறிக்கையை, 2018 மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *