மேலும்

நாள்: 18th March 2016

அமெரிக்கத் தூதுவர்- சம்பந்தன் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில், இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

பலாலியில் முதற்கட்ட ஆய்வில் ஈடுபட்டது இந்திய அதிகாரிகள் குழு

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவது தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நேரில் ஆராய்ந்துள்ளது.

மின் விநியோகம் சீரானதாக அறிவிக்கப்பட்டதும் மர்மமாக வெடித்தது அடுத்த மின்மாற்றி

சிறிலங்காவில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இன்று நண்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர், மினுவாங்கொட பகுதியில் உள்ள உபமின் நிலையத்தில் மின்மாற்றி ஒன்று மர்மமான முறையில் வெடித்து தீப்பிற்றி எரிந்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே துறைமுக நகரத் திட்டத்துக்கு அனுமதி

சில நிபந்தனைகளுக்கு இணங்கிய பின்னரே, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க, சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை உயர்அதிகாரி

அமெரிக்க விமானப்படையின் பசுபிக் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சரத் பொன்சேகா அம்பலப்படுத்திய இரகசியங்கள்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடத்தியிருந்தார்.

மைத்திரியின் கட்டளையை மீறிய 34 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிராஜ் படுகொலை வழக்கு – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக,  ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள, கொழும்பு மேலதிக நீதிவான், இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

முழுக்குடும்பத்தைச் சிறையிலிட்டாலும் அரசியலை விட்டு வெளியேறமாட்டேன் – மகிந்த சூளுரை

தனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் கூட அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்கு அழைப்பு – ஜப்பான் செல்கிறார் மைத்திரி

ஜப்பானில் வரும் மே மாதம் நடக்கவுள்ள ஜி-7 எனப்படும், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.