மேலும்

நாள்: 28th March 2016

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

400 மில்லியன் டொலர் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்கிறது ஜப்பான்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையத்தை அமைப்பதற்கு, 400 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு  ஜப்பான் முன்வந்துள்ளது.

சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை

சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் சிறிலங்கா அதிபர் – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின்  அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியை வழங்கியிருந்தாலும் கூட, அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கெட்டவாய்ப்பாக இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கோவாவில் கட்டப்படும் கப்பல்களைப் பார்வையிட்டது சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்டக் குழு

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

வடக்கில் உருக்கு வீடுகள் அமைக்கும் உடன்பாட்டை இறுதி செய்ய வருகின்றனர் மிட்டலின் பிரதிநிதிகள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் 65 ஆயிரம் உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பான, உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, இந்திய வம்சாவளித் தொழிலதிபரான லக்ஸ்மி மிட்டலுக்குச் சொந்தமான, ஆர்சிலோர் மிட்டல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வரும் 31ஆம் நாள் கொழும்பு வரவுள்ளது.

சிறிலங்காவில் கால்வைக்கிறது இந்தியாவின் எக்சிம் வங்கி

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) சிறிலங்காவில் விரைவில் கிளை ஒன்றை திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் கொழும்பில் தீவிரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான புதிய தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகள் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று,நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி

இறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.