மேலும்

நாள்: 12th March 2016

ஜெனிவாவுடன் சிறிலங்கா கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அதிகம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

மகிந்த அரசு பெற்ற கணக்கில் காட்டப்படாத கடன்கள் – சிறிலங்கா அரசுக்குத் தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுக் கடன்களால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பெரும் தலைவலியை எதிர்நோக்கியுள்ளது.

உண்மையான விசாரணை நடத்தினால் பொன்சேகாவே முதல் குற்றவாளியாக சிக்குவார் – ரம்புக்வெல

வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எட்டு மணிநேரம் நின்ற நிலையில் கோத்தா சாட்சியம் – ஆணைக்குழு கிடுக்கிப்பிடி

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன ஊழல், அவன்கார்ட் நிறுவன ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொடர்ச்சியாக 8 மணிநேரம், நிற்க வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளர் சிவராஜா : நோர்வே தமிழ்3 இனால் மதிப்பளிப்பு

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளரான சிவராஜா கணபதிப்பிள்ளை, நோர்வே தமிழ்3 வானொலியினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

புலிகளிடம் கைப்பற்றிய தங்கம் – தனக்கு ஏதும் தெரியாது என்கிறார் பசில்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் அப்பட்டமான பொய் என்று மறுத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது?- கண்டுபிடிக்கச் சொல்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் ஆளணியை குறைக்கவில்லை- ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆளணியைக் குறைக்க  எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை  என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வலிகாமத்தில் 700 ஏக்கர் காணிகள் இன்று இராணுவப் பிடியில் இருந்து விடுவிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 700 ஏக்கர் காணிகள் இன்று சிறிலங்கா படையினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இன்று யாழ்ப்பாணம் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  இந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைச் சிக்கவைக்க முனைகிறார் பொன்சேகா – கோத்தா

வெள்ளைக் கொடி விவகாரத்தில் தன்னை குற்றவாளியாக்குவதற்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.