மேலும்

நாள்: 15th March 2016

சிறிலங்காவின் தலையில் கனரக ஆயுதங்களைக் கட்டிவிடத் துடிக்கும் பாகிஸ்தான்

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் முடிவு – சீன நிறுவனம் வரவேற்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்றுள்ள சீன நிறுவனம், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஆதரவாக இரண்டு திட்டங்கள்- ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் தெரிவிப்பு

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளைக் கைச்சாதிடவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின், அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த நகைமுகன் மதுரையில் காலமானார்

தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஊடகவியலாளரும்- தனித் தமிழர் சேனையின் தலைவருமான க.நகைமுகன் தனது 66 ஆவது வயதில்  நேற்று மதுரையில் காலமானார்.

சீமான் : முரண்பாடுகளின் மொத்த வடிவம்

சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும்.

பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார் ரணில்

அண்மைய நாட்களில் ஏற்பட்ட எதிர்பாராத நீண்ட மின்சாரத் தடைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

துறைமுக நகர கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக சீன நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.

‘நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’–நூல் வெளியீடு

நோர்வேயில் ஈழத்தமிழர் புலம்பெயர் வாழ்வியலின் 60 ஆண்டுகள் நிறைவில் ’நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’எனும் தலைப்பிலமைந்த நூல்-,தமிழாசிரியர், கவிஞர், சமூக ஆர்வலராக நோர்வேத் தமிழர்களுக்கு அறியப்பட்ட உமாபாலன் சின்னத்துரை அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.