மேலும்

நாள்: 24th March 2016

முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? – விக்னேஸ்வரன் விளக்கம்

ஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டை, அரசியல் காரணங்களுக்காக தாம் புறக்கணிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை யானைகளை கறுப்பு யானைகளாக மாற்றப்போகிறதாம் சிறிலங்கா

முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வெள்ளை யானை திட்டங்கள், அதிகம் இலாபமீட்டத்தக்கவையாக மாற்றியமைக்கப்படவுள்ளன என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இராணுவக் கிராமம் – வித்தியா குடும்பத்துக்கும் ஒரு வீடு

சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.

சிறிலங்காவின் இழந்துபோன தலைமுறை – பாகிஸ்தான் ஊடகர்

பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள தமிழ்ச் சமூகமானது, போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னங்களையும் தலையீட்டையும் சகித்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நுரைச்சோலை மின் நிலையத்தை செயற்படுத்த சீனாவின் உதவியைக் கோருகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் பிரதான மின் உற்பத்தி மையத்தைச் செயற்படுத்துவதற்கு, சீனாவின் உதவியையும் ஆதரவையும் சிறிலங்கா அரசாங்கம் கோரவுள்ளதாக, பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அனுமான் பாலம் குறித்து இந்தியாவுடன் பேசவில்லை- சிறிலங்கா பிரதமர்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தம்முடன் இந்திய அரசாங்கம் எந்தப் பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகள் கோரியது போன்று பேச்சுவார்த்தைக் காலத்தில் யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால், மாவிலாறில் போர் வெடித்து இரண்டே வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் சிறிலங்காவின் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.