மேலும்

நாள்: 19th March 2016

இராணுவத்தளம் அமைக்க சீனாவுக்கு இடமளியோம் – சிறிலங்கா அரசாங்கம்

எந்தவொரு சூழ்நிலையிலும், சீனாவின் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சிறிலங்காவில் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்தல விமான நிலையம் அருகே சிறிலங்கா படையினரின் சிறப்பு நடவடிக்கை

மத்தல அனைத்துலக விமான நிலையப் பகுதிகளில் நடமாடும் மான்களையும், காட்டெருமைகளையும் விரட்டியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது.

காலிமுகத்திடல் ஓட்டப் பந்தயத்தில் தடுக்கி விழுந்தார் பிரான்ஸ் தூதுவர்

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடந்த பாரம்பரிய கனொன்போல் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பி்ரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ, கால் இடறிக் கீழே விழுந்தார்.

எட்கா உடன்பாட்டு வரைவை இன்னமும் ஆராய்கிறது இந்தியா

சிறிலங்காவுடன் செய்து கொள்ளவுள்ள எட்கா எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டின் வரைவை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இதற்குப் பதில் அளிக்கப்படும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

போருடன் தொடர்புடைய நீதிவிசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

போருடன் தொடர்பான விசாரணைகளை அடுத்து நடத்தப்படும் உள்நாட்டு நீதிச் செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தான் இணங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இனிமேலும் பொறுத்துக் கொள்வாரா இந்தியத் தூதுவர்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்தவைச் சூழ தற்போது இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்.

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம்கொள் – பா. செயப்பிரகாசம்

“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி.சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா- யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள்.

அடுத்த அரச எதிர்ப்புப் பேரணி – மகிந்தவுடன் செவ்வாயன்று ஆராயவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகள்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய, கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வரும் செவ்வாய்கிழமை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளனர்.

காப்பாற்ற முயன்ற மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவின் காலை வாரினார் கோத்தா

அதிபர் தேர்தல் பரப்புரைகளில், ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதற்கு அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள் – கிளம்பும் சந்தேகங்கள்

பியகமவில் உள்ள உபமின் நிலையத்தின் மின்மாற்றியில் கடந்தவாரம் ஏற்பட்ட வெடிப்புக்கும், கொட்டுகொட உப மின் நிலைய மின்மாற்றியில் நேற்று ஏற்பட்ட வெடிப்புக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.