மேலும்

நாள்: 10th March 2016

அடுத்துவரும் மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவை- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

அடுத்த சில மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவையாக இருக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் இன்று  ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளியே வந்ததும் லெப்.யோசித ராஜபக்சவிடம் விசாரணை – ருவான் விஜேவர்த்தன

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், சிறிலங்கா கடற்படையில் இருந்த போது, அவரது மோசடிகள், தன்னிச்சையான செயற்பாடுகள், மற்றும் செலவினங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு தேவை – சரத் பொன்சேகா

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.நா விசாரணைக்கான ஆலோசகர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

யோசிதவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல் – பசிலுக்குப் பிணை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் மார்ச் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘போர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்

சிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட  மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரியா செல்கிறார் மங்கள- அரசியல், பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முயற்சி

அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா- தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு நடத்தவுள்ளனர்.

சிறிலங்காவில் நிரந்தர தீர்வுக்கு இதுவே சந்தர்ப்பம் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார்

அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாமலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எட்கா உடன்பாட்டு வரைவு புதுடெல்லியிடம் கையளிப்பு

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான சிறிலங்காவின் வரைவு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.