மேலும்

நாள்: 31st March 2016

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்டக்குழு சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும்,  இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஆகியோரை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்

இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர்.  தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன் – ஹெல உறுமய குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது.

வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை முத்திரையிட்டு மூடப்பட்டது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடையும் – என்கிறது சிறிலங்கா

சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் இந்த ஆண்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி வெடிபொருள் விசாரணைகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடாது – பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் அச்சுறுத்தல் – கோத்தா எச்சரிக்கை

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் இரண்டாவது மனைவியே வெடிபொருட்களைக் காட்டிக் கொடுத்தார்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை சிறிலங்கா காவல்துறைக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.