மேலும்

நாள்: 11th March 2016

சீனாவின் கைக்குள் செல்கிறது அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம்

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவற்றை இயக்கும் பொறுப்பை, சீனாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இந்தியா – சிறிலங்கா இடையிலான எட்கா உடன்பாடு – சீனாவும் அக்கறை

இந்தியாவுடன் சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வது தொடர்பாக சீனா அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்வதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.

கொழும்புக்கும், சீனாவுக்கும் ஒரே நேரத்தில் இந்தியா வைக்கும் ‘செக்’

தென்னாசியாவின் ஒரேயொரு மிகப்பாரிய இறங்குதுறைமுகமாக உள்ள கொழும்பு அனைத்துலக இறங்குதுறையின் ஏகபோக ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது  இந்திய மாக்கடலில் இந்தியா தனது கரையோர கப்பல் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கும், அனைத்துலக கப்பல்களை ஈர்ப்பதற்குமான ஒரு மூலோபாயமாக அமைந்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் அதிரடி முடிவினால் இந்தியப் பயணத்தை கைவிட்டார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திடீர் முடிவினால் கைவிடப்பட்டுள்ளதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா உரையாற்றிய போது ஓடி ஒளிந்தார் மகிந்த – வாயடைத்து நின்றனர் அவரது அணியினர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று இறுதிப் போர் பற்றிய தகவல்களையும், ராஜபக்ச சகோதரர்களில் மோசடிகளையும் புட்டுப்புட்டு வைத்த போது. மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்தவர்கள் வாயடைத்துப் போயிருந்தனர்.

அமெரிக்காவின் 100 மில். டொலர் புத்தாயிரமாண்டு சவால் நிதியுதவி – சிறிலங்காவுடன் பேச்சு

சிறிலங்காவுக்கு புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் ஊடாக, 100 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பாக, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஏப்ரல் 1இல் ஆரம்பம்

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த எஞ்சிய மக்களை மிளக்குடியேற்றும் பணிகளை ஏப்ரல் 1ஆம் நாள் ஆரம்பிக்குமாறு மூதூர் பிரதேச செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை பெருந்தவறு – அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் சொல்ஹெய்ம்

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகள் செய்த பெரும் தவறு என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் ஒப்புக் கொண்டார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.