மேலும்

மின் விநியோகம் சீரானதாக அறிவிக்கப்பட்டதும் மர்மமாக வெடித்தது அடுத்த மின்மாற்றி

Fire transformerசிறிலங்காவில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இன்று நண்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர், மினுவாங்கொட பகுதியில் உள்ள உபமின் நிலையத்தில் மின்மாற்றி ஒன்று மர்மமான முறையில் வெடித்து தீப்பிற்றி எரிந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம், நேற்று வரை சிறிலங்காவின் மின்சார விநியோகத்தில் பெரும்தடங்கல்கள் ஏற்பட்டன.

நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலும் பழுது ஏற்பட்டதாலும், பியகம பகுதியில் இருந்த மின்மாற்றி வெடித்ததாலும், தொடர் மின்வெட்டுக்கு நாடு முகம் கொடுக்க நேரிட்டது.

கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளை அடுத்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கிகளும் செயற்படத் தொடங்கியுள்ளன.

இதையடுத்து, இனிமேல் மின்சாரத் தடை ஏற்படாது என்று, சிறிலங்கா மின்சார சபை இன்று மதியம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்று பிற்பகல் மினுவாங்கொட, கொட்டுகொடவில் உள்ள உபமின் நிலைய மின்மாற்றிகளில் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இதையடுத்து. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

மின்மாற்றி வெடித்ததால், நீர்கொழும்பின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சார வி்நியோக கட்டமைப்பை சீர்குலைக்கும் சதிவேலைகள் நடப்பதாக எழுந்த சந்தேகங்களை அடுத்து, அனைத்து மின் நிலையங்களிலும், உபமின்நிலையங்களிலும், முப்படையினரையும் சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *