மேலும்

நாள்: 1st March 2016

சமஸ்டியை வழங்குமாறு சிறிலங்காவிடம் கோர மறுத்தார் ராஜீவ் காந்தி – வரதராஜப்பெருமாள்

சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றோ, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவதிலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்துமாறோ சிறிலங்கா அரசாங்கத்தை, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்.

அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் முக்கிய வாய்ப்பு

அமெரிக்க -சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலானது சிறிலங்கா புதிய திசை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

காணிகளை விரைவாக ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா – கூட்டறிக்கையில் இணக்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மறைந்து கிடந்த மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் நாடு திரும்புவார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன

சிங்கப்பூர் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னசவின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாஜுதீன் கொலை வழக்கில் 16 சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு – விரைவில் கைது

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கத் தயாராகிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.