மேலும்

நாள்: 29th March 2016

நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.

சுதந்திரக் கட்சிப் பதவி வேண்டாம் – கோத்தா நிராகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி ஒன்றை சலுகையாக வழங்கினால் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சீனாவுடன் பல்வேறு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் ரணில்

அடுத்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது, சீன அதிகாரிகளுடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை விலக்கவில்லை- யாழ். படைகளின் தளபதி

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினரின் எந்த முகாம்களும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நுழைவிசைவு காலாவதியான 3,857 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர்

நுழைவிசைவு காலாவதியான பின்னரும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், இலங்கையர்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இனி அடுத்தடுத்து கொழும்பு வரும் – அமெரிக்கத் தூதுவர் சூசகம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்களின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்.

கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோத்தாவும் பசிலுமே மகிந்தவைத் தோற்கடித்தனர்- தயான் ஜெயதிலக

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், தம்மை முதன்மைப்படுத்தினர். இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டியேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.