மேலும்

நாள்: 9th March 2016

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு அங்கீகாரம்

புதிய அரசியலமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

புலிகளிடம் கைப்பற்றிய 80 கிலோ தங்கம் சிறிலங்கா இராணுவத்திடம் – 40 கிலோவைக் காணவில்லை

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மற்றொரு அமைச்சர் மட்டக்குழு சீனா பயணம் – உறவுகளைப் பலப்படுத்த முயற்சி

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவின் அமைச்சர் மட்டக் குழுவொன்று பீஜீங் சென்றுள்ளது.

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி

முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும். 

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார்.

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

பிரகீத் கடத்தல் – எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு, ஹோமகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தவில்லையாம்

இறுதிக்கட்டப் போரின் போது, தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யோசிதவுக்கு எதிரான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளிநாட்டில் இருந்து அழிப்பு

யோசித ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக கருதப்படும்,மின்னஞ்சல்கள் பலவும் திட்டமிட்டு ஒரு குழுவினராலோ, தனிநபராலோ அழிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.