மேலும்

நாள்: 21st March 2016

மாகாணங்களுடன் அதிகாரங்களைப் பகிரத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஹிக்கடுவவில் இன்று நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்று எதிரி இந்தியா – உதய கம்மன்பில

சிறிலங்காவின் வரலாற்று எதிரி நாடான இந்தியாவுடன், எட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் ஒரு மாநிலமாகவே சிறிலங்கா மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே  அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.

வெளியேற்றினால் புதிய கட்சி விரைவில் உருவாகும்- எச்சரிக்கிறார் மகிந்த

ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

பிரகீத் கடத்தல் முக்கிய சந்தேகநபரான லெப்.கேணல் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.