மேலும்

நாள்: 27th March 2016

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா, அமெரிக்கத் தூதுவர்கள்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் இன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

புதுடெல்லியில் தாக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்ட ஜே.ஆர் – காவல்துறை அதிகாரி தகவல்

கொழும்பில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவரால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட பின்னர், புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் அதுபோன்றதொரு தாக்குதலை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் அதிகாரி நிமால் லெகே.

கடற்புலிகளின் கண்ணிவெடியை ஆய்வு செய்த அமெரிக்க கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைத் தளபதியான வைஸ்அட்மிரல் ஜோசப் ஓகொயின் இன்று கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பூர் அனல் மின்திட்டம் குறித்து இந்தியாவுடன் பேசுவேன் – இரா.சம்பந்தன்

சம்பூரில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா நிறுவுவதால், ஏற்படக் கூடிய சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தாம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாரீசில் சிறப்புற நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு (ஒளிப்படங்கள்)

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

நீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ரணிலின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க சிறிலங்கா அதிகாரி பீஜிங் விரைவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விசாரணைக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவு

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.