மேலும்

நாள்: 25th March 2016

சீன விமானப்படை உயர் அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம்

சீன விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

பெல்ஜியத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்களை பதிவு செய்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு இன்று முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் அமர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா விமானப்படை சிறப்பு பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய விசேட திட்டம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இன்று ஆரம்பித்துள்ளது.

சம்பூரில் சிறிலங்கா கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு (சிறப்புப் படங்கள்)

திருகோணமலை- சம்பூரில் சிறிலங்கா கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் சிங்களத் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்- ஞானசார தேரர்

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர்.

பிரகீத் கடத்தல் விசாரணையை மகிந்த, விமல், ஞானசார தேரர் குழப்புகின்றனர் – சந்தியா

தனது கணவர் காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் ஆகியோர் குழப்பி வருவதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

900 கடற்படையினருடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் உருக்கினால் தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.