மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.
தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்மநபரால் பயணக் கைதியாக பொதுமக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ் சமூகத்தின் மனோநிலையை மாற்றும் முயற்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.
சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணை நீதியானதாக அமையாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.