மேலும்

சிட்னியில் பணயம் வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் – சிறிலங்கா அதிபர் கவலை

sydny-hostige (1)அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்மநபரால் பயணக் கைதியாக பொதுமக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

இன்றுகாலை 10 மணியளவில் சிட்னி நகரின் மத்திய பகுதியில் உள்ள, மார்ட்டின் பிளேசில்,  மிகவும் பரபரப்பான சொக்கலேட் கபே என்ற உணவகத்தினுள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவர், அங்கிருந்த பொது மக்களை சிறைப்பிடித்துள்ளார்.

சுமார் 30 வரையானோர் அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

குறித்த உணவகத்தின் ஜன்னல் வழியாக பயணக்கைதிகள் இருவர் கறுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்தில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள கொடி ஒன்றை காண்பித்துள்ளனர்.

அது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை ஒத்திருப்பதாக முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டது.

எனினும், அது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடி அல்ல என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

துப்பாக்கிதாரி யார், அவர் எதற்காக பயணம் வைத்திருக்கிறார் என்ற விபரங்கள் தெரியவரவில்லை.

sydny-hostige (1)

sydny-hostige (1)

இந்தநிலையில், அங்கிருந்து முதலில் மூன்று ஆண்கள் தப்பி வந்த நிலையில் சற்று முன் இரு பெண்கள் தப்பி வந்துள்ளனர்.

இதற்கிடையே அவுஸ்ரேலியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்க்ள அகற்றப்பட்டுள்ளனர். பெருமளவு படையினர் அங்கு குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்க, இந்தியத் தூதரகங்களில் இருந்து அதிகாரிகள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கா, இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“சிட்னியில் பணயம் வைக்கப்பட்டுள்ள நிலைமை ஆழ்ந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக அவுஸ்ரேலியாவுடன் சிறிலங்கா ஒன்றுபட்டு நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *